TNPSC பொதுத்தமிழ் மாதிரித் தேர்வு - 2

மாதிரித் தேர்விற்கான பாடப்பகுதிகள்
  1. தமிழின் தொன்மை_சிறப்புகள், திராவிடமொழி தொடர்பான செய்திகள்
  2. முதுமொழிக்காஞ்சி

    1. அம்மை, அப்பன் எனும் சொற்கள் தோன்றிய நாடு
      1. சேர நாடு
      2. தமிழ் நாடு
      3. குமரி நாடு
      4. கொரிய நாடு

    2. கற்றலைவிட சிறந்தது என்று முதுமொழிக்காஞ்சி எதனைக் குறிப்பிடுகிறது?
      1. வாய்மையுடைமை
      2. பேச்சாற்றல்
      3. கற்பித்தல்
      4. ஒழுக்கமுடைமை

    3. “தமிழ்மொழி அழகான சித்திர வேலைப் பாடமைந்த வெள்ளித்தட்டு; திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள்; தமிழ் என்னை ஈர்த்தது; குறளோ என்னை இழுத்தது” என்றவர்?
      1. டாக்டர் கிரௌல்
      2. டாக்டர் கால்டுவெல்
      3. ஜி.யு.போப்
      4. டாக்டர் ரவுலட்

    4. முதுமொழிக்காஞ்சி _________ எனவும் வழங்கப்படுகிறது.
      1. அறிவுரைத்திரட்டு
      2. அறநெறிப்பாட்டு
      3. அறிவுரைக்காஞ்சி
      4. அறவுரைக்கோவை

    5. தமிழில் ________பெயர்கள் மிகவும் குறைவு.
      1. வினையாலனையும் பெயர்கள்
      2. தற்குறிப் பெயர்கள் 
      3. காரணப் பெயர்கள் 
      4. இடுகுறிப் பெயர்கள்

    6. முதுமொழிக்காஞ்சியை இயற்றியவர் யார்?
      1. மதுரை ராசப்பக்கவிராயர்
      2. மதுரை கூடலூர்க்கிழார்
      3. மதுரை நக்கீரனார்
      4. மதுரையம்பதி

    7. எவ்வகை செய்யுள் வேறு எம்மொழிகளிலும் இல்லை?
      1. புறநானூறு
      2. அகநானூறு
      3. கலிப்பா
      4. ஆசிரியப்பா

    8. முதுமொழிக்காஞ்சி எத்தனை பாடல்களால் ஆனது?
      1. பத்து
      2. ஐநூறு
      3. ஐம்பது
      4. நூறு

    9. “தமிழ் பிறமொழித் துணையின்றி தனித்து இயங்குவதோடு மட்டுமின்றி தழைத்தோங்கவும் செய்யும்” என்று சொன்னவர்?
      1. ஜி.யு.போப்
      2. டாக்டர்.கிரௌல்
      3. கால்டுவெல்
      4. கம்பர்

    10. 10. பொருத்துக:

      அ) பிணி          - 1. அறிவு நுட்பம்
      ஆ) மேதை                  – 2. நோய்
      இ) பழமையான நிலப்பகுதி – 3. தண்டியலங்காரம்
      ஈ) ஓங்கலிடை –  4. குமரிக்கண்டம்

      1. அ)-4 ஆ)-3 இ)-1 ஈ)-2
      2. அ)-3 ஆ)-2 இ)-1 ஈ)-4
      3. அ)-4 ஆ)-1 இ)-3 ஈ)-2
      4. அ)-2 ஆ)-1 இ)-4 ஈ)-3



    Click G+ to Inform this article to your friends