TNPSC பொதுத்தமிழ் மாதிரித் தேர்வு - 3

Posted by: Yurekha ! on 16:32 Categories:|||
மாதிரித் தேர்விற்கான பாடப்பகுதிகள்
  1. திருக்குறள் -கல்வி
  2. திரிகடுகம்

  1. __________ம் எழுத்தும் மனிதர்க்கு இரு கண்கள் எனப்படுகின்றன
    1. சொல்லும்
    2. பேச்சும்
    3. எண்ணும்
    4. ஓவியமும்

  2. திரிகடுகம் __________ வகை நூல்களுள் ஒன்று.
    1. பதினென்மேல் கணக்கு
    2. ஆசாரக் கோவை
    3. வெண்பா
    4. பதினென்கீழ்க் கணக்கு

  3. யாருக்கு எந்த நாடும் தன்னாடாகும்?
    1. கற்றவர்க்கு
    2. அரசர்க்கு
    3. வீரருக்கு
    4. பயணிக்கு

  4. அறவுணர்வு உடையாரிடத்து உள்ளவைகளில் ஒன்று என திரிகடுகம் எடுத்துரைப்பது
    1. நன்றி மறவாமை
    2. வலியவரிடம் பணிவு
    3. வறியவரிடம் அன்புகாட்டல்
    4. வறியவர்க்கு ஈதல்

  5. ________என்பது ஒருவருக்கு அழியாத செல்வமாகும்
    1. வாய்மை
    2. ஒழுக்கம்
    3. பெருமை
    4. கல்வி

  6. புதரில் விதைத்த விதை போன்று பயனற்றது
    1. கயவனின் அறிவு
    2. ஒழுக்கமில்லாதவனின் அழகு
    3. அழகற்றவனின் ஒழுக்கம்
    4. மூடனின் தலைமை

  7. மணற்கேனியில் நீரைப் போல, கற்பதினால் சுரக்கக் கூடியது?
    1. செல்வம்
    2. நூல்கள்
    3. அறிவு
    4. ஒழுக்கம்

  8. திரிகடுகம் ____ வெண்பாக்களை கொண்ட நூல்
    1. பத்து
    2. ஐநூறு
    3. ஐம்பது
    4. நூறு

  9. திரிகடுகம் நூலை இயற்றியவர்
    1. கூடலூர்கிழார்
    2. நக்கீரர்
    3. நல்லாதனார்
    4. திரு.வி.க

  10. பொருத்துக:
    அ) வனப்பு     - 1. புதர்
    ஆ) தூறு    –     2. பாதுகாப்பு
    இ) உவப்ப     – 3. மகிழ
    ஈ) ஏமாப்பு    –  4. அழகு
    1. அ)-4 ஆ)-3 இ)-1 ஈ)-2
    2. அ)-3 ஆ)-2 இ)-1 ஈ)-4
    3. அ)-2 ஆ)-1 இ)-4 ஈ)-3
    4. அ)-4 ஆ)-1 இ)-3 ஈ)-2



Click G+ to Inform this article to your friends