Welcome to Target TNPSC Group IV 2016 - Free Online Coaching by TNPSCPortal

www.tnpscportal.in வழங்கும் இலவச இணையதள பயிற்சிக்கு உங்களை வரவேற்கிறோம். கடந்த ஆண்டு நடத்தப்பட்ட பயிற்சில் பங்குபெற்ற பலர் இன்று அரசு வேலைகளைப் பெற்றுள்ளார்கள் என்பது எங்களுக்கு பெருமிதத்தையும் உங்களுக்கு நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கும் செய்தியாகும்.  இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் மாபெரும் வெற்றி ஆண்டாக எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் . இந்த வெற்றியின் ஆண்டில் நீங்கள் விரும்பிய TNPSC தேர்வில் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். அதற்கு நீங்கள் ஓயாமல் உச்சரிக்க வேண்டிய  மூன்று மந்திர வார்த்தைகள் 

தன்னம்பிக்கை, விடா முயற்சி , கடின உழைப்பு. எந்த சோதனைகள் வந்தாலும் உங்கள் இலட்சியத்தை விட்டு விடாதீர்கள். "சரியான முயற்சியும் பயிற்சியும் இருந்தால் உங்களால் முடியாத ஒன்றுமே இல்லை"  என்ற நம்பிக்கை  உங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் நிறைந்திருக்க வேண்டும்.  அதற்காக  எங்கள் இணைய தளத்தின் மூலம் எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வோம். பயிற்சி என்பது ஒரு வழிகாட்டுதல் மட்டுமே, படிக்க வேண்டியது உங்கள் கடமை. TNPSC தேர்வுகளில் நீங்கள் வெற்றி பெற அனைத்து வழிகளையும் நாங்கள் காட்டுகிறோம்.  எதை படிக்க வேண்டும், எதை படிக்க வேண்டாம் என்பதை   நாங்கள் கூறுகிறோம். எங்களால் முடிந்த வரை உங்களை ஊக்கப்படுத்துகிறோம். 

பயிற்சி நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி பெற இயலாத  வேலைதேடும் இளைஞர்கள், பணிபுரிபவர்கள், இல்லத்தரசிகள் தங்களது அரசு வேலை கனவுகளை நனவாக்குவதற்காகவே இந்த 
இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.   TNPSC ன் புதிய பாடத்திட்டத்திற்கேற்ப ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட பாடப்பகுதிகளில் வாரத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த வாரத்தேர்வின் முடிவுகள் உங்கள் பெயருடன் இந்த இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம். 

எப்படி துவங்குவது ? எவற்றை படிப்பது ? 

சரியான துவக்கமே ஒரு வேலையை பாதி அளவிற்கு வெற்றிகரமாக முடித்ததற்கு சமம் என்பது பழமொழி.  நம்மில் பெரும்பாலானோருக்கு துவக்கம் தான் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. எனவே நமது பயிற்சியும் எளிய பாடத்திட்டத்திலிருந்தே துவங்குகிறது. ஆம், 6 முதல் 10 ஆம் வகுப்பு சமச்சீர்க்கல்வி பாடங்களிலிருந்து துவங்குவோம்.  பின்னர், 11 மற்றும் 12 ஆம் வகுப்பிலுள்ள  அரசியல் அறிவியல், பொருளாதாரம், வரலாறு, விலங்கியல், தாவரவியல் ஆகிய பாடங்களை முடிக்கலாம். இவ்வாறு, அனைத்து வகுப்பு பாடங்களையும்  படித்து முடித்து விட்டு, பின்னர் TNPSC தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தின் அடிப்படையில் , வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், அறிவியல் etc. என படிக்கலாம்.  பள்ளிப்பாடங்களை படித்துக் கொண்டே,  Arihant GK, சமீபத்திய செய்திகள் போன்றவற்றையும்  இடையிடையே படித்து முடிக்கலாம்.  மேற்கூறிய அனைத்தையும் படித்து முடித்தாலே, TNPSC தேர்வுகளில் 80 - 90% வினாக்களுக்கு சரியாக விடையளிக்க இயலும்.

உங்கள் எதிரிகளை அறிந்து கொள்ளுங்கள் !

போருக்கு செல்லுமுன் நமது எதிரிகள் யார், அவர்களின் பலம் என்ன , பலவீனம் என்ன என்பதை அறிந்திருத்தல் அவசியம்.  எங்கள் அனுபவத்திலிருந்து TNPSC தேர்விற்கு தயாராவோர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பட்டியலிடுகிறோம். 
 1. முதல் எதிரி - தாழ்வு மனப்பான்மை  :  நம்மால் TNPSC தேர்வில் வெற்றி பெறுவது சாத்தியமா ? என சந்தேகப்படுவதை நிறுத்துங்கள்.  நீங்கள் யாரை விடவும் தாழ்ந்தவர்கள் அல்ல, ஓட்டப்பந்தயத்தில் 
ஒட தயாராக வரிசையில் அனைவருக்கும் சமமாக நிற்கும் பந்தய வீரர் / வீராங்கனை தான். இங்கு அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்பவரே வெற்றியாளராகிறார். நீங்கள் அனைவரும் வெற்றியாளராய் மாறவேண்டும் என்பதே எங்களது ஓரே விருப்பம்.
2.இரண்டாவது எதிரி - சோம்பல் : "சோம்பற்கையினால் வேலை செய்கிறவன் ஏழையாவான்", "சோம்பேறியின் ஆத்துமா விரும்பியது ஒன்றையும் பெறாது" - இவைகள் புனித வேதாகமத்தின்வார்த்தைகள். ஆம், நம் அனைவரின் வெற்றிக்கும் மிகப்பெரிய தடைக்கல்லாக இருப்பது  இந்த சோம்பேறித்தனம் தான்.  எதையும் தள்ளிப்போடுவதை  தவிர்ப்பதால் மட்டுமே இந்த கொடிய 
சோம்பேறித்தனத்தை எதிர்கொள்ள முடியும். எதற்கெடுத்தாலும் "நொண்டி சாக்கு" சொல்வதை  நம்மால் இயன்றவரைக்கும் குறைக்க வேண்டும். 
3.மூன்றாம் எதிரி - தள்ளிப்போடுதல் : எந்த காரியத்தையும் "இப்போதெல்லாமல் எப்போது?" என்ற மனதோடு எதிர்கொள்ள வேண்டும். படிப்பதற்கான நேரத்தை எந்த காரணம் கொண்டும் 
தள்ளிப்போடுவதை தவிர்க்க வேண்டும். 

"நான் இல்லையென்றால் யார்?,  இப்போதில்லையென்றால் எப்போது?"  என்ற நம்பிக்கை வரிகள் உங்கள் எண்ணத்தோடு கலந்திருக்கட்டும். நீங்கள் வெற்றி வாகை சூடும் நாள் மிக அருகில். 

வாழ்த்துக்கள் ! 

பயிற்சிக்கான கால அட்டவணை, பாடத்திட்டம் மற்றும் பிற விபரங்கள் அறிய ’கிளிக்’ செய்யவும்.
http://www.tnpscportal.in/p/tnpsc-tnusrb-online-coaching.html

நன்றி !
என்றும் உங்கள் சேவையில்
TNPSCPortal

19 comments:

  1. This is really very good opportunity.... and friends !!!!! follows this tnpsc portal and work hard really you will get success !!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  2. Replies
    1. Sunday morning 9 am ... you can attend the test upto next saturday

      Delete
  3. when general tamil online test, here GK onlygiven

    ReplyDelete
  4. thanks lot for your support and engorgement

    ReplyDelete
  5. THANK U VERY MUCH

    ReplyDelete
  6. OK SIR THANK YOU KINDLY CO OPERATION

    ReplyDelete
  7. Good encouragement sir.thank you.

    ReplyDelete
  8. No words to explain your support and encouragement

    ReplyDelete
  9. thank you sir.i joined newly please guide me where i am struggle

    ReplyDelete