TNPSC மாதிரி தேர்வு - பகுதி 7 (151 முதல் 175 வினாக்கள்)

பொதுத் தமிழில் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதி - ஆ. பாடத்திட்டத்திற்கான கேள்விகள்

 1. நற்றிணை நூலுக்கு முதலில் உரை எழுதியவர் யார்?
  1. ஜி.யு.போப்
  2. தேவநேய பாவாணர்
  3. பின்னத்து நாராயணசாமி ஐயர்
  4. நற்றிணை மூவடியார்

 2. "ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்" - இந்த வரிகள் இடம் பெறும் நூல் எது ?
  1. புறநானூறு
  2. அகநானூறு
  3. நற்றிணை
  4. குறுந்தொகை

 3. ஐங்குறு நூறில் உள்ள மருதம் நிலத்தைப் பற்றிய 100 பாடல்களைப் பாடிய புலவர் யார்?
  1. ஓரம்போகியார்
  2. கபிலர்
  3. அம்மூவனார்
  4. ஓதலாந்தையார்

 4. கலித்தொகை நூலிலுள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை ?
  1. 100
  2. 125
  3. 145
  4. 150

 5. அகநானூறு நூலில் காணப்படும் கடவுள் வாழ்த்து யாரைப்பற்றி பாடியது ?
  1. திருமால்
  2. சிவன்
  3. கணபதி
  4. முருகன்

 6. 'நெடுந்தொகை' என மறு பெயருள்ள நூல் எது ?
  1. நற்றிணை
  2. அகநானூறு
  3. புறநானூறு
  4. குறுந்தொகை

 7. சங்க இலக்கியங்களுள் வரலாற்றைப் பற்றி அதிக அளவில் கூறும் நூல் எது ?
  1. பரிபாடல்
  2. பதிற்றுப்பத்து
  3. அகநானூறு
  4. புறநானூறு

 8. சங்க காலத்தில் பெண்கள் உடன் கட்டை ஏறும் வழக்கம் இருந்தது என்னும் செய்தியைக் கூறும் நூல் எது ?
  1. பரிபாடல்
  2. குறுந்தொகை
  3. அகநானூறு
  4. புறநானூறு

 9. “முசிறி” எந்த நாட்டின் துறைமுகமாக இருந்தது ?
  1. சோழ நாடு
  2. பாண்டிய நாடு
  3. சேர நாடு
  4. பல்லவ நாடு

 10. “பொதிகை” மலையை ஆண்ட குறுநில மன்னன் யார் ?
  1. ஓரி
  2. ஆய்
  3. பாரி
  4. பேகன்

 11. மாங்குடி மருதனாரை ஆதரித்த மன்னன் யார் ?
  1. கரிகாலன்
  2. நெடுஞ்செழியன்
  3. அதியமான்
  4. குமணன்

 12. நடு கல் - பற்றி கூறும் தொல்காப்பியத் திணை எது ?
  1. காஞ்சித் திணை
  2. தும்பைத் திணை
  3. உழிஞைத் திணை
  4. வெட்சித் திணை

 13. “ஈன்று புறந்தருதல் என்தலைக்கடனே” என்று பாடிய புலவர் யார் ?
  1. காக்கைப்பாடினியார்
  2. ஒளவையார்
  3. பொன்முடியார்
  4. கபிலர்

 14. ஒளவை என்பதற்கு பொருள் என்ன ?
  1. முதியவள்
  2. தாய்
  3. சகோதரி
  4. ஆலோசனை அருள்பவர்

 15. பாரியின் மகள்கள் “ அங்கவை” சங்கவை” இருவரையும் மணம் முடித்துக் கொடுத்தவர் யார் ?
  1. அதியமான்
  2. கபிலர்
  3. ஒளவையார்
  4. பிசிராந்தையார்

 16. தமிழ் இலக்கியத்தில் மொத்தம் எத்தனைப் புலவர்கள் "ஒளவையார்" என்ற பெயரில் உள்ளனர் ?
  1. 1
  2. 3
  3. 4
  4. 5

 17. பிசிராந்தையார் - எந்த நாட்டு புலவர் ?
  1. சேரநாடு
  2. பாண்டிய நாடு
  3. சோழ நாடு
  4. பல்லவ நாடு

 18. சிலப்பதிகாரத்தில் வருகின்ற “கவுந்தியடிகள்” என்பவர் ?
  1. ஆடு மேய்ப்பவர்களின் தலைவர்
  2. ஊர்த்தலைவர்
  3. பெண் சமணத்துறவி
  4. பொளத்த துறவி

 19. இந்திர விழா எத்தனை நாட்கள் நடை பெற்றது ?
  1. 12 நாட்கள்
  2. 15 நாட்கள்
  3. 28 நாட்கள்
  4. 31 நாட்கள்

 20. மணநூல், காமநூல் , முக்தி நூல் - என்ற மறுபெயர்களுடைய நூல் எது ?
  1. திருவாசகம்
  2. சிலப்பதிகாரம்
  3. மணிமேகலை
  4. சீவக சிந்தாமணீ

 21. ஜி.யு.போப் - இலியட், ஒடிசியுடன் ஒப்பிட்ட தமிழ் நூல் எது ?
  1. சிலப்பதிகாரம்
  2. சீவக சிந்தாமணி
  3. மணிமேகலை
  4. குறிஞ்சிப்பாட்டு

 22. "வளையாபதி" நூல் ஒரு
  1. வைணவ நூல்
  2. பொளத்த நூல்
  3. சைவ நூல்
  4. சமண நூல்

 23. தமிழை பக்திமொழி என குறிப்பிட்டவர் யார் ?
  1. தனி நாயக அடிகள்
  2. தேவநேயபாவாணர்
  3. திரு.வி.க
  4. பாரதியார்

 24. தமிழ்நாட்டில் பக்தி இலக்கிய காலம் எனப்படுவது ?
  1. ஆங்கிலேயர் ஆட்சிகாலம்
  2. பல்லவர் ஆட்சி காலம்
  3. சங்க காலம்
  4. முஸ்லிம்கள் ஆட்சிகாலம்

 25. "தேவாரம்" எனப்படுவது சைவ திருமுறைகளில் முதல் எத்தனைத் திரு முறைகளை உள்ளடக்கியது ?
  1. 3
  2. 5
  3. 7
  4. 94 comments:

 1. Nice sir , pls update more questions

  ReplyDelete
 2. very useful questions please update questions for tnpsc group 1 exams

  ReplyDelete
  Replies
  1. Thanks for ur feedback ...we will update soon

   Delete