TNPSC மாதிரி தேர்வு - பகுதி 1 (1 முதல் 25 வினாக்கள்)


 1. பின் வருவனவற்றில் சிந்து சமவெளி மக்களின் முக்கிய உணவு எது ?
  1. அரிசி
  2. சோளம்
  3. கோதுமை
  4. கம்பு

 2. இறந்தவர்களை ஹரப்பா மக்கள் என்ன செய்தனர் ?
  1. எரிப்பார்கள்
  2. திறந்த வெளியில் விட்டு விடுவர்
  3. நதிகளில் மிதக்க விடுவர்
  4. புதைப்பார்கள்

 3. பின் வருபவற்றில் பொருந்தாது எது
  1. தனுர் வேதம் - மந்திரம்
  2. ஆயுர்வேதம் - மருத்துவம்
  3. காந்தார வேதம் - இசை, நடனம்
  4. சில்ப வேதம் - கட்டடக்கலை

 4. மூன்றாம் புத்த மாநாடு இவரின் காலகட்டத்தில் நடைபெற்றது
  1. பிம்பிசாரர்
  2. கனிஸ்கர்
  3. அஜாதசத்ரு
  4. அசோகர்

 5. இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லிம் மன்னர் யார்
  1. கஜினி முகமது
  2. கோரி முகமது
  3. குத்புதீன் ஐபக்
  4. முகமது பின் காசிம்

 6. தீன் இலாகி மதத்தை ஏற்றுக் கொண்ட ஒரே இந்து மன்னர் யார் ?
  1. ராஜா மான் சிங்
  2. ராஜா பீர்பால்
  3. தோடர்மால்
  4. பகவான்தாஸ்

 7. 1932 ல் பூனா ஒப்பந்தத்தில் மகாத்மா காந்தியுடன் ஒப்பந்தம் செய்தவர் யார் ?
  1. இராஜாஜி
  2. இராஜேந்திரபிரசாத்
  3. அம்பேத்கர்
  4. இர்வின் பிரபு

 8. கீழ்கண்டவற்றில் காலமுறை வரிசையில் சரியான விடையை கூறுக ?
  1. தண்டி யாத்திரை, காந்தி-இர்வின் உடன்படிக்கை, வெள்ளையனே வெளியேறு இயக்கம்,லாகூர் காங்கிரஸ்
  2. காந்தி-இர்வின் உடன்படிக்கை, தண்டி யாத்திரை, வெள்ளையனே வெளியேறு இயக்கம்,லாகூர் காங்கிரஸ்
  3. காந்தி-இர்வின் உடன்படிக்கை, தண்டி யாத்திரை, லாகூர் காங்கிரஸ், வெள்ளையனே வெளியேறு இயக்கம்
  4. லாகூர் காங்கிரஸ் , தண்டி யாத்திரை, காந்தி-இர்வின் உடன்படிக்கை, வெள்ளையனே வெளியேறு இயக்கம்

 9. இந்திய தேசிய படை எங்கு ஆரம்பிக்கப்பட்டது ?
  1. இந்தியா
  2. சீனா
  3. சிங்கப்பூர்
  4. ஜப்பான்

 10. இந்தியாவின் முதல் தமிழ் நாளிதள் எது ?
  1. தினமணி
  2. நவசக்தி
  3. விடுதலை
  4. சுதேசமித்திரன்

 11. ஒரு கலோரி என்பது
  1. 2.9 ஜீல்
  2. 0.29 ஜீல்
  3. 0.418 ஜீல்
  4. 4.18 ஜீல்

 12. மூளைக் காய்ச்சலுக்கு காரணமான உயிரி எது ?
  1. கொசு
  2. நாய்
  3. எலி
  4. பன்றி

 13. கல்லீரலுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்வது எது ?
  1. ஹெபாடிக் சிரை
  2. கொரொனரி தமனி
  3. கொரனரி சிரை
  4. ஹெபாடிக் தமனி

 14. நண்டின் இளம் உயிரி
  1. மைசிஸ்
  2. சிப்ரிஸ்
  3. அலிமா
  4. சோயியா

 15. தேனீ காலனியில் 'ராயல் ஜெல்லி' ஐ உருவாக்கும் தேனீ வகை
  1. டிரோன்கள்
  2. ராணி தேனி
  3. டிரோன்கள் மற்றும் ராணி தேனி இணைந்து
  4. வேலையாட்கள்

 16. மனித விந்தில் காணப்படும் உடற்குரோமோசோம்களின் எண்ணிக்கை
  1. ஒரு ஜோடி
  2. 11
  3. 22
  4. 23

 17. மலேரியா நோய்க்கான மருந்து தரும் தாவரம்
  1. ஃபில்லாந்தஸ் செர்பன்டினா
  2. ராவுல்ஃபியா நெரூரி
  3. டிஜிடாலிஸ் பர்பியூரியா
  4. சின்கோனா அஃப்ஸினாலிஸ்

 18. தொலை நகலியினால் அனுப்பப வேண்டிய அச்சடித்த ஆவணத்தை மின்னலைகளாக மாற்றும் முறை ?
  1. எதிரொளிப்பு
  2. பண்பேற்றம்
  3. ஒளிமாறுபாடு
  4. வரிக்கண்ணோட்டம்

 19. செயற்கை கோள்கள் பயன்படுவது
  1. தொலைக்காட்சி அலைபரப்பல்
  2. கனிம வள கண்டறிதல்
  3. விண்வெளி ஆராய்ச்சி
  4. இவை அனைத்தும்

 20. ஒரு மின் மாற்றியானது
  1. ஆற்றலை மாற்றுகிறது
  2. அதிர்வு எண்களை மாற்றுகிறது
  3. மின் விசையை மாற்றுகின்றது
  4. மின்னழுத்தத்தை மாற்றுகின்றது

 21. வலுவூட்டப்பட்ட இரும்புக் குழாய்களில் பூசப்பட்டிருப்பது
  1. தகரம்
  2. காரீயம்
  3. தாமிரம்
  4. துத்தநாகம்

 22. கீழ்கண்ட எதில் துத்தநாகம் இல்லை
  1. பித்தளை
  2. வெங்கலம்
  3. ஜெர்மன் வெள்ளி
  4. சோல்டர்

 23. குளோரோபில் என்கிற நிறமியில் காணப்படும் தனிமம் எது ?
  1. துத்தநாகம்
  2. இரும்பு
  3. மெக்னிசியம் மற்றும் துத்த நாகம்
  4. மெக்க்னிசியம்

 24. சதுப்பு நிலக் காட்டின் தாவர வகைக்கு உதாரணம்
  1. புளும்பாகோ
  2. வாண்டா
  3. ஹைடிரில்லா
  4. அவினீசியா

 25. இயற்கை முறை வகைப் பட்டியலை வெளியிட்டவர்
  1. டார்வின்
  2. லின்னேயஸ்
  3. முல்லர்
  4. பெந்தம் மற்றும் ஹீக்கர்27 comments:

 1. GOOD FOR LEARNING STUDENTS

  ReplyDelete
 2. very usefull, thank you for your online support!

  ReplyDelete
 3. GOOD QUESTION THANKS

  ReplyDelete
 4. Its very usefull please if possible redirect me to english questions.

  ReplyDelete
 5. very useful please if possible means redirect me to english test

  ReplyDelete
 6. very useful information

  ReplyDelete
 7. வணக்கம். நான் ஒரு மலேசியப் பல்கலைக்கழக மாணவன். இலக்கணம் தொடர்பாக இப்படிப்பட்ட பயிற்சிகள் உள்ள இணையத்தளம் உள்ளதா? இலக்கணம் கற்றுக்கொள்ள எனக்கு முக்கியமாகத் தேவைப்படுகின்றது. தகவல் இருந்தால் alagesanmsc@yahoo.com - க்கு அனுப்பவும். நன்றி

  ReplyDelete