பொதுத்தமிழ் பாடத்திட்ட வாரியான கொள்குறி மாதிரித் தேர்வு – 1

Posted by: TNPSCPortal.In on 00:44 Categories:
பகுதி –அ 1) பொருத்துக - பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல், புகழ்பெற்ற நூலாசிரியர்கள் – நூல்கள்
 1. 1. பொருத்துக:
    அ) நண்பு - 1. வஞ்சம்
    ஆ) படிறு – 2. நட்பு
    இ) ஏமாப்பு – 3. பாதிரிப் பூ
    ஈ) பாடலம் – 4. பாதுகாப்பு
  1. அ)-2 ஆ)-3 இ)-1 ஈ)-4
  2. அ)-3 ஆ)-2 இ)-1 ஈ)-4
  3.   அ)-2 ஆ)-1 இ)-4 ஈ)-3
  4.  அ)-4 ஆ)-1 இ)-3 ஈ)-2

 2. “சேயூர்க் கலம்பகம்” நூலை இயற்றியவர்
  1. திரு.வி.க
  2. சங்கரதாச சுவாமிகள்
  3. ஔவையார்
  4. அந்தகக்கவி வீரராகவர்

 3. பொருத்துக:
    அ) சேய் - 1. வயல்
    ஆ) செய் – 2. பகை
    இ) மதலை – 3. துணை
    ஈ) தெறு – 4. தூரம்
  1. அ)-4 ஆ)-1 இ)-3 ஈ)-2
  2. அ)-2 ஆ)-3 இ)-1 ஈ)-4
  3. அ)-3 ஆ)-2 இ)-1 ஈ)-4
  4. அ)-2 ஆ)-1 இ)-4 ஈ)-3

 4. இவற்றில் முடியரசன் இயற்றிய நூல் எது?
  1. குயில்பாட்டு
  2. பூங்கிளி
  3. சிலை எழுபது
  4.  வீர காவியம்
 5. பொருத்துக:
    அ) மடவாள் - 1. பவளம்
    ஆ) கடம் – 2. பெண்
    இ) துகிர் – 3. உடம்பு
    ஈ) மிசை – 4. மேடு
  1. அ)-2 ஆ)-1 இ)-4 ஈ)-3
  2. அ)-4 ஆ)-1 இ)-3 ஈ)-2
  3. அ)-3 ஆ)-2 இ)-1 ஈ)-4
  4. அ)-2 ஆ)-3 இ)-1 ஈ)-4

 6. உரிமை வேட்கை நூலாசிரியர் யார்
  1. பாரதிதாசன்
  2. திரு.வி.க
  3. முடியரசன்
  4. சுரதா

 7. பொருத்துக:
    அ) தூறு - 1. உறவினர்
    ஆ) நெறி – 2. வழி
    இ) தமர் – 3. புதர்
    ஈ) கலம் – 4. அணி
  1. அ)-4 ஆ)-1 இ)-3 ஈ)-2
  2. அ)-2 ஆ)-3 இ)-1 ஈ)-4
  3. அ)-3 ஆ)-2 இ)-1 ஈ)-4
  4. அ)-2 ஆ)-1 இ)-4 ஈ)-3

 8. இவற்றில் பம்மல் சம்பந்தனார் இயற்றிய நாடகம்?
  1. பவளக்கொடி
  2. நல்லதங்காள்
  3. இலவகுசா
  4. சபாபதி

 9. குழந்தை இலக்கியம் நூலை படைத்தவர்
  1. திரு.வி.க
  2. நாமக்கல் கவிஞர்
  3. வாணிதாசன்
  4. பாரதிதாசன்

 10. பொருத்துக:
    அ) களபம் - 1. குதிரை
    ஆ) புரவி – 2. சந்தணம்
    இ) மேழி                – 3. பொன்
    ஈ) கனகம் – 4. கலப்பை
  1. அ)-4 ஆ)-1 இ)-3 ஈ)-2
  2. அ)-2 ஆ)-3 இ)-1 ஈ)-4
  3. அ)-3 ஆ)-2 இ)-1 ஈ)-4
  4. அ)-2 ஆ)-1 இ)-4 ஈ)-3Click G+ to Inform this article to your friends
To attend more Pothu Tamil Tests >>> Go Back to Test Page