பொதுத்தமிழ் பாடத்திட்ட வாரியான கொள்குறி மாதிரித் தேர்வு – 2

Posted by: Yurekha ! on 21:49 Categories:

பகுதி –அ _ 2) தொடரும் தொடர்பும் அறிதல் - தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்கள், அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்
 1.  “திரைக்கவித் திலகம்” எனப்படுபவர்?
  1.  கண்ணதாசன்
  2.  வாலி
  3.  மருதகாசி
  4.  பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்

 2. அறவுரைக் கோவை என அழைக்கப்படும் நூல்?
  1.  நாலடியார்
  2.  முத்தொள்ளாயிரம்
  3. சிலை எழுபது
  4.  முதுமொழிக்காஞ்சி 

 3. அடைமொழிக்குரிய புலவர் யார்? – “நன்னூற் புலவன்”
  1.  சீத்தலைச் சாத்தனார்
  2.  ஔவையார்
  3.  திருவள்ளுவர்
  4.  தொல்காப்பியர்

 4. மணநூல் எனப்படுவது?
  1.  சிலப்பதிகாரம்
  2.  பெரியபுராணம்
  3.  நல்லதங்காள்
  4.  சீவகசிந்தாமணி

 5. தமிழ் நாடகத் தந்தை எனப்படுபவர்
  1.  சங்கரதாச சுவாமிகள்
  2.  பரிதிமாற் கலைஞர்
  3.  ஆர்.எஸ்.மனோகர்
  4.  பம்மல் சம்பந்தனார்

 6. புலவராற்றுப்படை எனக் குறிக்கப்படும் நூல்?
  1.  பொருநராற்றுப்படை
  2.  திருமுருகாற்றுப்படை
  3.  பெரும்பாணாற்றுப்படை
  4.  சிறுபாணாற்றுப்படை

 7.  “நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா” எனும் தொடரால் அறியப்படுபவர்
  1.  பாரதிதாசன்
  2.  பெரியார்
  3.  பாரதியார்
  4.  புதுமைப்பித்தன்

 8.   “நெடுந்தொகை” எனக் குறிப்பிடப்படும் நூல்?
  1.  குறுந்தொகை
  2.  நற்றிணை
  3.  புறநானூறு
  4.  அகநானூறு

 9. “கவியோகி” என்ற அடைமொழி யாரைக் குறிக்கிறது?
  1.  பாரதிதாசன்
  2.  சுப்ரமணிய பாரதியார்
  3.  சுத்தானந்த பாரதியார்
  4.  சோமசுந்தர பாரதியார்

 10.  “முத்தமிழ்க் காப்பியம்” எனப்படும் நூல்?
  1.  திருக்குறள்
  2.  கம்பராமாயணம்
  3.  நன்னூல்
  4.  சிலப்பதிகாரம்Click G+ to Inform this article to your friends
To attend more Pothu Tamil Tests >>> Go Back to Test Page