இந்திய அரசியலமைப்பு மாதிரித்தேர்வு - பகுதி 2 (26-50 கேள்விகள்)

Posted by: TNPSCPortal.In on 16:22 Categories:
                             Prepared by Mr.Ajmal Khan, Chennai (Facebook)
                      Click here to attend more Indian Polity online tests

 1. கூற்று 1: பண மசோதாவிற்க்கான  கூட்டு கூட்டங்களை கூட்டுபவர் குடி அரசு தலைவர்.
             கூற்று 2. கூட்டு கூட்டங்களுக்கு தலைமை தாங்குபவர் சபாநாயகர்.
  1. 1 தவறு, 2 சரி
  2. 1 சரி, 2 தவறு  
  3. இரண்டும் சரி
  4. இரண்டும் தவறு

 2. தற்போது சொத்து உரிமை எந்த சரத்தில் உள்ளது?
  1. 31 A
  2. 301 A
  3. 300 A 
  4. எதுவும் இல்லை.

 3. பொருத்துக:
  1. DWCRA -- a. 1997
  2. RLEGP -- b. 1996
  3. MWS --   c. 1983
  4. GKY --   d. 1982
  1. 1(D), 2(C),3(B), 4(A)
  2. 1(A), 2(D),3(B), 4(C)
  3. 1(A), 2(B),3(C), 4(D)
  4. 1(D), 2(B),3(C), 4(A)

 4. 75 பேர் உள்ள ஒரு கட்சியில் இருந்து குறைந்த பட்சம், எத்தனை பேர் கட்சியை விட்டு வெளியறினால் கட்சித்தாவல் சட்டத்தின் படி அவர்களின் பதவி பறி போகாது?    
  1. 20
  2. 25
  3. 30
  4. 35

 5. பின்வரும் எந்த நாட்டில் நேரடி மக்களாட்சி முறை இன்றளவும் பின்பற்றபட்டு வருகிறது?
  1. சுவிச்சர்லாந்து 
  2. பிரான்சு 
  3. அயர்லாந்து 
  4. ஜெர்மனி 

 6. மசோதாக்களின் நிலை பற்றிய பின்வரும் கூற்றுகளில் தவறனாது:
  1. தன்னிடம் சமர்ப்பிக்கப்பட்ட மசோதாக்களை ஏதேனும் ஆலோசனை இருப்பின் குடி அரசு தலைவர் ஒரு முறை திருப்பி அனுப்பலாம்.
  2. ஒரு மசோதா, மாநிலங்கள் அவையில் நிறைவேற்றப்பட்டு மக்களவையில் நிறைவேற்றப்படாமல் மக்களவை கலைக்கப்பட்டால் அந்த மசோதா காலாவதி ஆகாது.புதிய மக்களவை வந்து அம் மசோதாவை உறுதி செய்யும்.
  3. ஒரு மசோதா, மக்கள் அவையில் நிறைவேற்றப்பட்டு மாநிலங்கள் அவையில் நிறைவேற்றப்படாமல் மக்களவை கலைக்கப்பட்டால் அந்த மசோதா காலாவதி ஆகி விடும்.
  4. மசோதாக்களின் நிலை பற்றி கூறும் சரத்து: 108
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும் 
  3. 3 மட்டும்
  4. 4 மட்டும்

 7. பொது கணக்கு குழுவின் தலைவரை நியமிப்பது?
  1. குடி அரசு தலைவர்  
  2. காபினெட் 
  3. பிரதமர்  
  4. சபாநாயகர் 

 8. இந்திய அரசு சட்டம் 1935 மற்றும் இந்திய விடுதலைச் சட்டம் 1947 ஆகியவற்றை ரத்து செய்யும் சரத்து: 
  1. 392
  2. 393
  3. 394
  4.  395

 9. தற்போதைய பதவியில் உள்ள மத்திய தேர்தல் ஆணையர்களுள் பொருந்ததாவர்:
  1. நசீம் ஜைதி
  2. AK ஜோதி
  3. அரிசங்கர் பிரம்மா 
  4. OP ராவத்

 10. மாநகராட்சியைப்  பற்றி கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது:
  1. மாநில சட்ட மன்றத்தில் இயற்றப்படும் சட்டம் ஒன்றினால்தான் மாநகராட்சி நிறுவப்படுகிறது.

  2. மாநில அரசாங்கத்தால் மாநகராட்சியை கட்டுப்படுத்தவும், கலைக்கவும் முடியும்.

  3. ஒரு மாநகராட்சி என்பது குறிப்பிட்ட ஒரு அதிகார வரம்பிற்குள் பணியாற்றுவது.

  4. மாநகராட்சி உறுப்பினர் இன்றி, மாநகராட்சி கூட்டங்களில் கலந்து கொள்பவர் மாநகராட்சி ஆணையர் ஆவார்.
  1. அனைத்தும் 
  2. 1, 2 மட்டும்
  3. 2, 3 மட்டும் 
  4. 3, 4 மட்டும்

 11. கூற்று (A): எந்த விதமான சூழ்நிலையிலும் எந்த விதமான நெருக்கடி அதிகாரங்களையும் அறிவிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது
  விளக்கம் (R) : ஏற்கனவே ஒரு நெருக்கடி நிலைமை அமலில் உள்ள போது குடியரசு தலைவரால் மற்றொரு விதமான நெருக்கடி நிலைமையை அறிவிக்க முடியும்.
  1. கூற்று (A) சரி, (R) தவறு
  2. கூற்று (A) தவறு (R) சரி
  3. கூற்று (A) மற்றும் (R) இரண்டும் சரி; மேலும் (R)என்பது (A) க்கு சரியான விளக்கமல்ல.
  4. கூற்று (A) மற்றும் (R) இரண்டும் சரி; மேலும் (R)என்பது (A) க்கு சரியான விளக்கம்.

 12. "நகர்பாலிக் சட்டம்" என்று அழைக்கப்படும் திருத்தும்?
  1.  72 வது திருத்தும் 
  2.  73 வது திருத்தும் 
  3.  74 வது திருத்தும் 
  4.   75 வது திருத்தும் 

 13. நேஷியோ (Natio) என்ற இலத்தீன் சொல்லின் சரியான பொருள்:
  1. நாடு 
  2. பிறப்பு 
  3. உரிமை 
  4. அனைத்தும்

 14. கூற்று A: மக்களவைத் தலைவர் தனது பதவி விலகல் கடிதத்தை மக்களவைத் துணை தலைவரிடம் கொடுக்க வேண்டும்.
  கூற்று B: மாநிலங்கள் அவைத் தலைவர் தனது பதவி விலகல் கடிதத்தை மாநிலங்களவைத் துணை தலைவரிடம் கொடுக்க வேண்டும்.
  1. A சரி, B தவறு
  2. A தவறு, B சரி
  3. இரண்டும் சரி
  4. இரண்டும் தவறு

 15.  பொருத்துக: ஐநா வின் முக்கிய அமைப்புகளின் பெயர்களும், அவை உள்ள இடங்களும்
  1. IAEA -- a. ரோம்   --     i)  இத்தாலி  
  2. ICSC -- b. நெதர்லாந்த்  -- ii) நியூயார்க்
  3. IFDA -- c. அமெரிக்கா ---iii) திஹேக்
  4. ICJ --  b. ஆஸ்திரியா ----iv) வியன்னா
  1. 1(d)(ii), 2(c)(i),3(b)(iv),4(a)(iii) 
  2. 1(b)(iv), 2(c)(ii),3(a)(i),4(b)(iii) 
  3. 1(b)(iv), 2(c)(ii),3(b)(iv),4(a)(iii) 
  4. 1(d)(iv),2(b)(ii),3(c)(i),4(a)(iii)

 16. இந்தியாவில் உள்ள மக்களாட்சியின் முறை?
  1. நேரடி மக்களாட்சி முறை 
  2. மறைமுக மக்களாட்சி முறை 
  3. பாராளுமன்ற முறை  
  4. அனைத்தும்

 17. சரியான கூற்று எது: இந்தியாவில் இதுவரை நிதி நெருக்கடி நிலைமை:
  1. தாற்கலிகமாக 2 மாதங்கள் மட்டும் பயன்படுத்தப்பட்டு உள்ளது. 
  2. 1 ஆண்டு வரை பயன்படுத்தப்பட்டு உள்ளது.
  3. 1975 ம் ஆண்டு பயன்படுத்தப்பட்டது.  
  4. இதுவரை இல்லை.

 18. 1956 ல் எந்த சட்ட திருத்தத்தின் படி மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன?
  1.  சட்டதிருத்தம் 5
  2. சட்டதிருத்தம் 6
  3. சட்டதிருத்தம் 7
  4.  சட்டதிருத்தம் 8

 19. வயது வந்தோர் வாக்குரிமை குறித்து கூறும் சரத்து:
  1. சரத்து 325
  2. சரத்து 326
  3. சரத்து 327
  4. சரத்து 328

 20. கூற்று (1): தல சுயாட்சியை ரிப்பன் பிரபு, 1885 ல் அறிமுகம் செய்தார்.
  கூற்று (2) : தல சுயாட்சி என்பது கிராமங்களிலும், நகரங்களிலும் வாழும் மக்களின் நல் வாழ்வை உயர்துவதற்க்கான வழிமுறையினை வகுத்து அவற்றை செயல்படுத்துவதாகும்.
  1. 1 தவறு, 2 சரி
  2. 1 சரி, 2 தவறு  
  3. இரண்டும் தவறு
  4. இரண்டும் சரி

 21. தே.மு.தி.க தொடங்கப்பட்ட ஆண்டு?
  1.  2003, செப் 14
  2.   2004, செப் 14
  3.   2005, செப் 14
  4. 2006, செப் 14

 22. பஞ்சயாத்து மற்றும் நகராட்சிகளுக்கு அரசியல் அங்கீகாரத்தை வழங்கிடும் திருத்தங்களான 73 மற்றும் 74 கொண்டு வந்த பிரதமர்:
  1. ராஜீவ் காந்தி 
  2. நரசிம்ம ராவ்
  3. வி.பி. சிங் 
  4. வாஜ்பாய்

 23. நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் தலைவாராக இருந்தவர்?
  1. மொராஜி தேசாய் 
  2. நேரு
  3. படேல்
  4. குல்சாரிலால் நந்தா 
 24. மதிய-மாநில அரசுகளின் உறவை பற்றி கூறும் அட்டவணை எது?
  1. அட்டவணை 06
  2. அட்டவணை 07
  3. அட்டவணை 08
  4. எதுவும் இல்லை

 25. இந்தியாவில் 1989 க்கு முன்பு வரை வாக்களிக்க தேவையான வயது?
  1. 18
  2. 20
  3. 21
  4.  22