இந்திய அரசியலமைப்பு மாதிரித்தேர்வு - பகுதி 1 (1-25 கேள்விகள்)

Posted by: TNPSCPortal.In on 07:38 Categories:

 1. பொருத்துக:
             Column A                                 Column B
  1)      அடிப்படை உரிமை  a. அமெரிக்கா
  2)      அரசின் வழி காடும் நெறி முறைகள்   b. அயர்லாந்து 
  3)       சட்டத்தின் ஆட்சி    c. இங்கிலாந்து
  4)      அவசர நிலை பிரகடனத்தின் பொது அடிப்படை உரிமைகள் ரத்து         d. ஜெர்மனி
  1. 1(A), 2(B),3(C), 4(D)
  2. 1(A), 2(D),3(B), 4(C)
  3. 1(C), 2(D),3(A), 4(B)
  4. 1(A), 2(D),3(C), 4(B)

 2. மாநில சட்ட சபை உறுப்பினர் பதவியை இழக்கும்போது ஒரு சட்டசபை சபாநாயகர் தனது சபாநாயகர் பதவியை?
  1. தற்காலிகமாக  இழப்பார்.
  2. தற்காலிகமாக  இழக்க மாட்டார்.
  3. இழந்து விடுவார்
  4. இழக்க மாட்டார்

 3. பின் வருவனற்றுள் வாக்களிக்க தேவையானது எது?
  1. வயது
  2. சொத்து 
  3. குடி உரிமை
  4. அரசியல் ஈடுபாடு

 4. பொருத்துக:
          
  1)      முகப்புரை அரசியல் அமைப்பின் ஒரு பகுதி ஆகாது --a. மினேர்வா மில்ல்ஸ் வஸ் யூனியன் ஆப் இந்தியா -- i) 1960
  2)      முகப்புரை அரசியல் அமைப்பின் ஒரு பகுதி ஆகும்  -- b. கோதாரி கல்வி குழு  -- ii) 1973
  3)       06-14 வயதுள்ள குழந்தைகளுக்கு கட்டாய அடிப்படை கல்வி  -- c. நீ பெருபாரி  -- iii) 1980
  4)      அரசின் வழி காட்டு நெறி முறைகளும், அடிப்படை உரிமைகள் இரண்டும் ஒன்றே - d. கேசவனந்த பாரதி vs கேரளா -- iv)  1964
  1. 1(d)(ii), 2(c)(i),3(b)(iv),4(a)(iii) 
  2. 1(c)(i), 2(d)(ii),3(b)(iv),4(a)(iii) 
  3. 1(c)(i), 2(d)(ii),3(b)(iii),4(a)(iv) 
  4. 1(d)(iii), 2(b)(iv),3(c)(ii),4(a)(i) 

 5. பின் வரும் எந்த சட்ட திருத்தும் குடி அரசு தலைவர், பிரதமர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனையின் படி நடக்க வேண்டும் என்று கூறுகிறது?. 
  1. சட்ட திருத்தம் 42
  2. சட்ட திருத்தம் 44
  3. சட்ட திருத்தம் 46
  4. சட்ட திருத்தம் 48 

 6. ஆசிரியர் மற்றும் பட்டதாரிகள் தொகுதில் இருந்து  சட்ட மேலவைக்கு நியமிக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை?
  1. 1/6
  2. 1/8
  3. 1/10
  4. 1/12

 7. பொருந்தாதை கூறு: சட்ட திருத்தும் 44 (1978) ன்  படி மேற்கொள்ளப்பட்டவை: 
  1. தேசிய நெருக்கடின் மீதான பாராளுமன்றத்தின் ஒப்புதல் 60 லிருந்து 30 நாட்களாக குறைக்கப்பட்டது. 
  2. அடிப்படை கடைமைகள் பகுதி IV A வில் சேர்க்கப்பட்டது.
  3. குடி அரசு தலைவர் ஆலோசனை ஏதும் இருப்பின் மசோதாவை ஒரு முறை திருப்பி அனுப்பலாம். 
  4. சொத்துரிமை அடிப்படை உரிமைகள் பகுதில் இருந்து நீக்கப்பட்டது.

 8. கூற்று 1: இந்திய அரசியல் அமைப்பின் வரைவு குழுவின் தலைவர் அம்பேத்கார் அவர்.
         கூற்று 2. வரை குழுவில் மொத்தம் 8 பேர் இடம் பெற்று இருந்தனர்.
  1. இரண்டும் தவறு
  2. இரண்டும் சரி
  3. 1 தவறு, 2 சரி
  4. 1 சரி, 2 தவறு

 9. எந்த சரத்தின் படி இந்திய தலைமை வழக்கறிகரை குடி அரசு தலைவர் நியமனம் செய்கிறார்? 
  1. சரத்  74
  2. சரத் 75  
  3. சரத் 76
  4. சரத் 77

 10. பொருந்தாதை கூறு: ஒரே இரவில் எழுதப்பட்ட அரசியல் அமைப்புகளை கொண்டுள்ள நாடுகள்:
  1. ஆஸ்திரேலியா 
  2. அமெரிக்கா
  3. மியன்மார்
  4. இந்தியா

 11. 79 (2001) திருத்தத்தின் படி மக்கள் தொகைக்கு ஏற்ப சட்ட மன்ற மற்றும் பாராளுமன்ற தொகுதிகள் மறு சீரமைக்கப்பட்டது. இது எந்த ஆண்டு வரை தொடரும்?.
  1. 2016
  2. 2020
  3. 2024
  4. 2026

 12. எத்தனை சட்ட மன்ற தொகுதிகள் சேர்ந்து ஒரு பாராளுமன்ற தொகுதியாக கணக்கிடப்படும்?
  1. 04
  2. 05
  3. 06
  4. 07

 13. கூற்று 1: மக்களவை உறுப்பினர் எந்த மாநிலத்தில் இருந்தும் தேர்ந்து எடுக்கப்படலாம்.

       கூற்று 2. மாநிலங்கள் அவை உறுப்பினர், எந்த மாநிலத்தில் இருந்து தேர்ந்து எடுக்கப் படுகிறாரோ அம் மாநிலத்தின் பதிவு செய்யப்பட்ட வாக்காளராக இருக்க வேண்டும்.  

  1. இரண்டும் தவறு
  2. இரண்டும் சரி
  3. 1 தவறு, 2 சரி
  4. 1 சரி, 2 தவறு  

 14. குடி அரசு தலைவர் மேலைவைக்கு 12 பெயரை நியமிப்பார் என்ற கருத்து பெறப்பட்ட நாடு?
  1. அயர்லாந்து  
  2. பிரான்சு  
  3. கனடா 
  4. இங்கிலாந்து 

 15. குடி அரசு துணை தலைவர் தமது பதவியின் வழியாக மேலவை தலைவராக செயல்படுவார் என்ற கருத்து பெறப்பட்ட நாடு?
  1. அர்ஜென்டினா
  2. அமெரிக்கா 
  3. கனடா 
  4. இங்கிலாந்து 

 16. கூற்று 1: குடி அரசு தலைவர் தேர்தலில் தேர்ந்து எடுக்கப்பட்ட மற்றும் நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க உரிமை உண்டு.
         கூற்று 2. குடி அரசு தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடை பெறும்.
  1. இரண்டும் தவறு
  2. இரண்டும் சரி
  3. 1 தவறு, 2 சரி
  4. 1 சரி, 2 தவறு

 17. இந்திய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட மொத குழுக்களின் எண்ணிக்கை?
  1. 07
  2. 09
  3. 11
  4. 13

 18. 6 முதல் 14 வயது வரை வயதுள்ள குழந்தைகளுக்கு  கட்டாய கல்வியை கொண்டு வந்த சட்ட திருத்தும்?
  1. 21 A
  2. 76
  3. 86
  4. 86 A

 19. குடியரசு தலைவாரல் பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்படும் உறுப்பினர்கள் எண்ணிக்கை?
  1. 12
  2. 14
  3. 16
  4. மேற்கண்ட எதுவும் இல்லை.

 20. சாதரணமாக ஒரு கிராம சபையில் இருக்கவேண்டிய குறைந்த பட்ச மக்களின் எண்ணிக்கை?
  1. 500
  2. 1000
  3. 2000
  4. 3000

 21. பாபு ராஜேந்திர பிரசாத், அரசியல் அமைப்பு குழுவின் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்ட நாள்?
  1. டிச 15, 1946
  2. டிச 13, 1946
  3. டிச 11, 1946
  4. டிச 9, 1946

 22. சட்டக்கூறு 368ன் படி முகப்புரையின் சட்டத்திருத்தம் செய்யலாமா? என்ற வினா முதன் முதலில் எழுந்த வழக்கு எது?
  1. பெருபரி வழக்கு    
  2. கேசவானந்த பாரதி வழக்கு
  3. மினர்வா மில்ஸ் வழக்கு   
  4. எல்.ஐ.சி. வழக்கு

 23. எந்த சரத்தின் படி யுனியன் பிரதேசங்களான டெல்லி மற்றும் புதுச்சேரி குடி அரசு தேர்தலில் 1995 ம்ம் ஆண்டு முதல் பங்கு கொள்கின்றன?
  1. 70
  2. 71
  3. 72
  4. 73
 24. இந்தியாவில் உள்ள 545 பாராளுமன்ற தொகுதிகளில் தனிதொகுதிகளின் எண்ணிக்கை?
  1. 111
  2. 131
  3. 141
  4. 161

 25. சாதரணமாக ஒரு மாநகராட்சியின் மக்கள் தொகை, 10 இலட்சம். ஆண்டு வருமானம் எவ்வளவு?
  1. 50 இலட்சம்
  2. 75 இலட்சம்
  3. 1 கோடி
  4. 2 கோடி